நிலையான நில முகாமைத்துவ அணுகுமுறைகள்

நிலையான நில முகாமைத்துவம் தொடர்பான புதிய தொழில்நுட்பம் ஒன்றையோ பலவற்றையோ செயற்படுத்துவதற்காக முன்னெடுக்கும் முறைமைகள் நிலையான நில முகாமைத்துவத்திற்கான அணுகுமுறைகளாக அடையாளப்படுத்தப்படுகிறது.தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருள் ஒத்துழைப்பு பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு என்பன இதில் உள்ளடங்கும். அணுகுமுறை என்பது திட்டமொன்றை அல்லது காணியை உபயோகிப்பவர்கள் பயன்படுத்தும் செயற்பாடாக இருக்கலாம்.

WOCAT யின் கேள்வித்தாளுக்கு அமைய ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் பூகோள நிலையான நில முகாமைத்துவ தரவுக் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. அவை நிலையான நில முகாமைத்துவம் தொடர்பான அறிவை பகிர்தல் மற்றும் செயற்படுத்துதல் பற்றி முடிவுகளை எடுக்கும் திறன் மேம்பாட்டிற்கும் மற்றும் நிலையான நில முகாமைத்துவ முறைமையை முன்னெடுப்பதற்கும் பயன்படுத்த முடியும்.

இலங்கை நிலையான நில முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்தவும் அவற்றை பிரபலப்படுத்தவும் அரச தனியார் மற்றும் ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன.
இதற்கமைய மண், நீர் மற்றும் மரம்மட்டைகள் மற்றும் விலங்குகள் போன்ற பூமியின் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது தொடர்பான பல வெற்றிகரமான அனுபவங்கள் இருக்கின்றன.

SriCat, என்பது அவ்வாறான வெற்றிகரமான அனுபவங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் அவற்றை பகிர்தல் ஊடாக நிலையான நில முகாமைத்துவம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவும் செயற்படுத்தவும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக WOCAT உடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

 

 

இலங்கையில் உள்ள நிலையான நில மேலாண்மை அணுகுமுறைகள் WOCAT ல் நிலையான நில மேலாண்மை அணுகுமுறைகளைத்தேடுதல் WOCAT ல் நிலையான நில மேலாண்மை அணுகுமுறைகளை உட்சேர்த்தல்