SriCat என்பது இலங்கை நிலையான நில முகாமைத்துவம் தொடர்பான தகவல்களை பரிமாறும் தேசிய தளமாகும்.
பூகோள சுற்றாடல் வசதிகளினூடாக நிதிஉதவி வழங்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் விவசாய தரமற்ற நிலங்களை புனரைக்கும் திட்டத்தின் கீழ் SriCat ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதோடு இதற்கு பூகோள சுற்றாடல் வசதி (GEF) நிதி உதவி அளித்தது.(2016-2020)
SriCat இன் நோக்கம்
இலங்கை நிலப்பரப்பு ,காணி வளம் தொடர்பில் பொறுப்புள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் காணப்பட்ட போதும் நில வளம் தொடர்பில் தகவல் வழங்கக்கூடிய தனியான அமைப்பு கிடையாது.
SriCat என்பது இந்த அனைத்து நிறுவனங்கள் குறித்த நில தகவல்களை பரிமாறும் பொதுவான தளமாகும்.
அதே போன்று தனியார் துறை மற்றும் விவசாயிகளுக்கு தமது காணி மற்றும் நிலம் பற்றி தகவல்களை பரிமாற SriCat வாய்ப்பளிக்கிறது.
இலங்கையில் நிலையான நில முகாமைத்துவம் தொடர்பான சகல நிறுவனங்களினூடாகவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது SriCat இன் நோக்கமாகும்.
அதே போன்று நிலையான நில முகாமைத்துவம் குறித்த பூகோள அறிவு மற்றும் அனுபவத்தை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கவும் இலங்கையின் நிலையான நில முகாமைத்துவம் தொடர்பான புதிய அணுகுமுறை , தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகள் அடங்கிய தகவல்களை ஆங்கில மொழி வாயிலாக உலகின் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் பரிமாறுவதற்கு தளமாக SriCat காணப்படுகிறது.
நிலையான நில முகாமைத்துவம் மற்றும் அது தொடர்பான அறிவு முகாமைத்து வம் என்பவற்றின் தேவையை நன்கு உணர்ந்து நிலையான நில முகாமைத்துவம் தொடர்பான தகவல்களை திரட்டவும் ஆவணப்படுத்தவும் மதிப்பீடு செய்யவும் பரிமாறவும் பகிரவும் பயன்படுத்தவும் SriCat உதவி வருகிறது.
அதே போன்று சுற்றாடல் அமைச்சினூடாக ஐக்கிய நாடுகள் பாலைவனமாதலுக்கு எதிரான ஜக்கிய நாடுகள் உடன்பாட்டுக்கு அமைவாக இலங்கையில் பாலைவனமாதலை தடுக்கும் தேசிய திட்டம் 2015-2024 கீழ் மண் அரிப்பைத் தடுக்கத் தேவையான தகவல் முகாமைத்துவத்திற்கும் நில தகவல் பரிமாற்றத்திற்கும் தளமொன்றை உருவாக்கும் உடன்பாட்டையும் SriCat நிறைவு செய்கிறது.
SriCat பங்காளிகள்
* சுற்றாடல் அமைச்சு
* காணி அமைச்சு
* பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு
* விவசாயத் திணைக்களம்
* கமநல அபிவிருத்தி திணைக்களம்
* காணி பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களம்
* விவசாய ஏற்றுமதி திணைக்களம்
* வன பாதுகாப்பு திணைக்களம்
* நீர்ப்பாசன திணைக்களம்
* வன ஜீவராசிகள் திணைக்களம்
* வானிலை ஆய்வு திணைக்களம்
* நிலஅளவைகள் திணைக்களம்
* இயற்கை வள முகாமைத்துவ நிலையம்
* காணி சீர்திருத்த ஆணைக்குழு
* இடர் முகாமைத்துவ நிலையம்
பான தகவல்களை பரிமாறும் தேசிய தளமாகும்.