மண் அரிப்பை கட்டுப்படுத்தக் கூடிய அல்லது நிலத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தக் கூடிய பௌதீக செயற்பாடுகள் நிலையான நில முகாமைத்துவத்துவ தொழில் நுட்பம் என அடையாளப்படுத்தப்படுகிறது. அத்தகைய தொழில்நுட்பங்கள் கிராமியப் பொருளாதாரம் சார்ந்த, தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற,கட்டமைப்பு ரீதியான முகாமைத்துவ முறைகள் பலவற்றை கொண்டதாக இருக்கலாம்.
இலங்கை சூழ்நிலையை பொறுத்தவரை அரச நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள், மற்றும் ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பன நிலையான நில முகாமைத்துவ தொழில் நுட்பங்கள், மற்றும் ஏனைய அணுகு முறைகளை மேம்படுத்துவதற்கு பங்களிக்கின்றன. நில முகாமைத்துவத்தை நிரந்தரமாக பயன்படுத்துவதற்கான வெற்றிகரமான அனுபவங்கள் பல காணப்படுவதோடு அவற்றிடையே மண், நீர், தாவரம் மற்றும் விலங்கு முகாமைத்துவம் என்பவற்றில் பல முன்மாதிரிகள் காணப்படுகின்றன.
அவ்வாறான நிலையான நில முகாமைத்துவ தொழில் நுட்பங்களை ஆவணப்படுத்தல், மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக தயார் செய்தல் மற்றும் நிலையான நில முகாமைத்துவம் சார்ந்த புதிய அறிவாக அறிமுகம்செய்து நில முகாமைத்தும் தொடர்பில் தீர்மானம் எடுக்கவும் செயற்படுத்தவும் ஒத்துழைப்பு வழங்க World Overview of Conservation Approaches and Technologies (WOCAT) உடன் இணைந்து SriCat செயற்படுகிறது.
இலங்கையின் நிலையான நில மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் | WOCAT ல் நிலையான நில மேலாண்மை தொழில்நுட்பங்களைத் தேடல் | WOCAT ல் நில மேலாண்மை தொழில்நுட்பங்களை உட்சேர்த்தல் |