நில பயன்பாட்டுத் திட்டமிடலுக்கான நுண்ணீர்நிலை அடிப்படையிலான பங்கேற்பு அணுகுமுறையானது, நிலையான நில முகாமைத்துவத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப கிராம நில வளங்களை உகந்த முறையில் ஒதுக்கீடு செய்வதில் முதன்மையாக கவனம் செலுத்தும் முறையான மற்றும் ஊடாடும் செயல்முறையாகும். பல துறைகளின் ஒருங்கிணைப்பு, பல பங்குதாரர்களின் ஈடுபாடு மற்றும் பங்கேற்பு நில பயன்பாட்டு திட்டமிடல் செயல்முறை முழுவதும் நில பயனாளிகளின் சுறுசுறுப்பான பங்கேற்பு ஆகியனவே இந்த அணுகுமுறையின் முக்கிய அம்சங்களாகும்.
சபுகசுல்பாத/ கலயாட கந்துர நுண் நீர்நிலையானது இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில் (DS) அமைந்துள்ளது. நிலையற்ற நில முகாமைத்துவ நடைமுறைகள் நில அமைப்பழிவடைவுக்கு வழிவகுத்துள்ளன, இதனால் உணவுப் பாதுகாப்பிற்கான சவால்கள் மற்றும் விவசாயத்திற்கான பொருளாதார வருமானமின்மை அதிகரித்துள்ளது.
மேலும், “உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தினால்” நீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் அதே வேளையில் அமைப்பழிவடைந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான உத்திகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் இருந்தது. 2018 இல், அமைப்பழிவடைந்த விவசாய நிலங்களின் மறுவாழ்வுத் திட்டம் (RDALP) இந்த நுண்ணிய நீர்நிலைகளுக்கு பங்கேற்பு நில பயன்பாட்டுத் திட்டமிடல் (PLUP) அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது. பொதுவாக, பங்குதாரர்கள் நில பயன்பாடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க தனித்தனியாக செயல்படுவது வழக்கம். ஆனால், PLUP செயல்முறையானது அனைத்து பங்குதாரர்களின் சுறுசுறுப்பான ஈடுபாட்டை நம்பியிருந்தது. PULP அணுகுமுறையின் முக்கிய அம்சங்களாவன; செயல்முறை முழுவதும் பல்துறை ஒருங்கிணைப்பு மற்றும் பல பங்குதாரர் ஈடுபாட்டுடன் நுண்ணீர்நிலை PULP இன் ஊக்குவிப்பு.
நில பயன்பாட்டுத் திட்டமிடலுக்கான கட்டாய நிறுவனமான நில பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் துறையின் (LUPPD) மாவட்ட அலுவலக அதிகாரிகளால் இந்த செயல்முறை தொடங்கப்படுகின்றது.
முதலாவதாக, LUPPD ஆனது அப்பகுதியில் உள்ள நுண்ணீர்நிலைகளை அடையாளம் கண்டு நிலப்பயன்பாடு/நிலப்பரப்பு வரைபடங்களை உருவாக்குகின்றது. இந்தப் பணிக்கு பண்டாரவளை DS மூலம் உதவி வழங்கப்படுகிறது, இது இச்செயல்முறையில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைக்கும் திறன் கொண்ட பிரதேசக்காணிகளின் நிர்வாக அமைப்பாகும். பின்னர் LUPPD இன் அதிகாரிகள் சமூகத் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கள அலுவலர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தி நிலப் பயன்பாட்டு வரைபடங்களை களப் பார்வை மூலம் சரிபார்க்கின்றனர். மேலும், இந்த வரைபடங்களில் தனித்தனி நிலங்களின் எல்லை நிர்ணயமும் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்து, நில அமைப்பழிவடைவின் நிலை மற்றும் பயிர் முகாமைத்துவ நடைமுறைகளின் தன்மை ஆகியவற்றைக் கண்டறிய சமூகத் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், LUPPD அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் களப் பார்வை நடத்தப்படுகிறது. இது நுண்ணீர்நிலைகளில் அமைப்பழிவடைந்த நிலங்களை அடையாளம் காண வழிவகுக்கும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் செயல்முறையாகும். இவ்வாறு, பின்னர் சமூகம் LUPPD இன் ஆதரவுடன் நில அமைப்பழிவு மற்றும் முகாமைத்துவ நிலைகளின் வரைபடங்களைத் தயாரிக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்து தனிப்பட்ட பங்குதாரர்களின் பங்கேற்புடன் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு (விரிவான மற்றும் நீண்ட சந்திப்பு/கள்) நடைபெறுகின்றது. இதன்போது, நில அமைப்பழிவு/பயன்பாடு, உரிமை, மோதல்கள் மற்றும் சமூக-பொருளாதாரக் கவலைகள் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன. மேலும், அனைத்து பங்கேற்பாளர்களும் சாத்தியமான தீர்வுகளில் ஆரம்ப ஒருமித்த கருத்துக்கு வருகிறார்கள். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பங்குதாரர்களைக் கண்டறிந்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக, அமைப்பழிவடைந்த மற்றும் மோசமாக நிர்வகிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதை இலக்காகக் கொண்டு, முழு மைக்ரோ நுண்ணீர்நிலைக்கான நில பயன்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும். நில பயன்பாட்டுத் திட்டமானது பண்ணை மற்றும் பண்ணைக்கு வெளியே நிலப் பயன்பாட்டு ஒதுக்கீடுகள் மற்றும் நுண்நீர்நிலைகளுக்குள் ஒட்டுமொத்த நிலப் பயன்பாட்டைத் தக்கவைக்கும் SLM நடைமுறைகளுக்குத் தேவையான பரிந்துரைகளை உள்ளடக்கியது. இந்த திட்டம் விரிவான நில மறுசீரமைப்பு திட்டமாக செயல்படுகிறது. பின்னர், நுண் நீர்நிலைகளுக்கான துறை சார்ந்த விரிவான திட்டத்தைத் தயாரிக்க, குறிப்பிட்ட பங்குதாரர்களின் பிரதிநிதித்துவத்துடன் பல்வேறு துறைகளுடன் விரிவான விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இது விவசாயிகளின் தனிப்பட்ட நிலப் பகுதிகளுக்கான விரிவான திட்டங்களை உள்ளடக்கியது, உதாரணமாக TSHDA அதிகாரிகள் நுண் நீர்நிலைகளில் சிறு தேயிலை சாகுபடிக்கான விரிவான திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான உள்ளீடுகளை வழங்குகிறார்கள், இதில் தனிப்பட்ட விவசாயிகளுக்கான திட்டங்கள் அடங்கும். பின்னர், தனிப்பட்ட பண்ணைக்கான மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவது வெவ்வேறு பங்குதாரர்களால் கூட்டாக செயற்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஏற்றுமதி விவசாயப் பயிர்களுடன் ஊடுபயிராக தேயிலை பயிரிடுவதற்கு விவசாயிகளின் நிலம் அடையாளம் காணப்பட்டால், TSHDA மற்றும் ஏற்றுமதி விவாசாயத்துறை அதிகாரிகள் இருவரும் அதை செயல்படுத்த தங்கள் ஆதரவை வழங்குகிறார்கள். இந்த அணுகுமுறையில் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் (விரிவாக்க அதிகாரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்) மற்றும் RDALP திட்டத்தின் திட்ட அலுவலர்களால் நடத்தப்படும் உழவர் களப் பள்ளிகள் அடங்கும். மேலும், விவசாயிகள் SLM நடைமுறைகள் குறித்த தங்கள் அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்களை (WhatsApp®) பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். SLM இன் நிஜ உலக உதாரணங்கள் கள வருகைகள் மூலம் உள்ளூர் சமூகத்திற்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இந்த அணுகுமுறையின் இறுதி கட்டம் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு ஆகும். விவசாய சேவை அபிவிருத்தி அதிகாரிகள், RDALP மற்றும் தனிப்பட்ட பங்குதாரர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், செயல்முறையானது பிரதேச விவசாயக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும்.
தொகுப்பாளர்கள்: பேராசிரியர் வ.அ.உ. விதாரண மற்றும் திருமதி சசிந்திகா ரணவன, மண் அறிவியல் துறை, விவசாய பீடம், பேராதனை பல்கலைக்கழகம்
பங்களிப்பாளர்கள் : திரு. நிமல் குணசேன – திட்ட முகாமையாளர், RADL திட்டம், திருமதி மங்கலிகா கருணாராச்சி - கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கமநல ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் மற்றும் திருமதி டபிள்யூ.எம்.பொடிமெனிகே - காணி பயனர்
மேலும் தகவலுக்கு: https://qcat.wocat.net/en/wocat/approaches/view/approaches_6237/