தொழில்நுட்பத்தின் சுருக்கமான விளக்கம்

தொழில்நுட்பத்தின் வரைவிலக்கணம்:

பயிர்-கால்நடை ஒருங்கிணைப்பு ஊட்டச்சத்து சுழற்சி மற்றும் மண்ணின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது: மாட்டு எருவிலிருந்து தயாரிக்கப்பட்ட திட மற்றும் திரவ கரிம உரங்கள் மண்ணில் அல்லது காய்கறிகள் மற்றும் தேயிலை இலைகளில் சேர்க்கப்படுகின்றன.

தொழில்நுட்பத்தின் விரிவான விளக்கம்
விளக்கம்:

இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள தொழுவ பகுதியில் கறவை மாடு வளர்ப்பு பொதுவானது. விவசாயிகள் பொதுவாக பால் நுகர்வு மற்றும் விற்பனைக்காக சுமார் 2-3 ஹெக்டேயரில் 3-4 பசுக்களைக் வைத்திருக்கிறார்கள். நேர்காணல் செய்யப்பட்ட நில உரிமையாளர் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை: மாடுகள் வனப்பகுதிகளில் மேய்ந்தன, மேலும் தண்ணீர் மற்றும் கூடுதல் தீவனம் தேவைக்கேற்ப வழங்கப்படவில்லை. வீடுகள் போதுமானதாக இல்லை. பண்ணைக்கழிவுகள் முறையாக மீள்சுழற்சி செய்யப்படவில்லை. வருடாந்த பயிர்கள் மற்றும் தேயிலைக்கு சரியான மண் பாதுகாப்பு இல்லாமல் செங்குத்தான நிலத்தில் பண்ணை அமைந்துள்ளது. இரசாயன உரங்களை அதிகம் சார்ந்து இருந்தது. இதன் விளைவாக, பால் உற்பத்தி சராசரிக்கும் குறைவாகவே காணப்பட்டதுடன் பயிர் விளைச்சலும் குறைவைடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கழிவுநீர் சரிவில் கழுவப்பட்டு செல்வதால் நீர்த்தேக்கத்தில் மாசு ஏற்பட்டுள்ளது. பண்ணையில் ஊட்டச்சத்து சுழற்சி, மண் உற்பத்தித்திறன் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் விலங்கு-பயிர் மேலாண்மை உத்திகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பால் மற்றும் பயிர் உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.


நில உரிமையாளர் முதன்முதலில் 2018 இல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அமைப்பழிவடைந்த விவசாய நிலத்திற்கான புனர்வாழ்வு திட்டத்தில் (RDALP) பதிவு செய்யப்பட்டார். தேயிலையின் கீழ் செங்குத்தான பகுதிகளுக்கு மண் பாதுகாப்பு முன்னுரிமை. நடைமுறைகள் விளிம்பு பயிர் மற்றும் கட்டமைப்பை இணைக்கின்றன. இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த பயிர்-கால்நடை முறையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. RDALP மற்றும் Fonterra Pvt. Ltd. நில உரிமையாளருக்கு தீவனம் மற்றும் தண்ணீரை வழங்குவதற்கான உள்கட்டமைப்புடன் நவீன மாட்டுத்தொழுவத்தை கட்ட உதவியது. அதன்பிறகு, மாடுகளுக்கு தீவனம் அளிக்கப்பட்டது: மேய்ச்சல் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாட்டு எரு சேகரிக்கப்பட்டு மண்ணில் சேர்க்கப்படுவதற்கு முன் 2-3 வாரங்களுக்கு குவியல்களில் சேமித்து வைக்கப்பட்டது. அதே கொட்டகையில், பயிர் எச்சங்கள் மற்றும் சமையலறை/ வீட்டுத் தோட்டக் கழிவுகளுடன் எரு கலக்கப்பட்டு கலப்பு உரம் தயாரிக்கப்படுகிறது. கால்நடைகளின் சிறுநீர் மற்றும் கழிவு நீர் ஒரு சிமென்ட் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது, அங்கு அது தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளுடன் கலக்கப்படுகிறது; இது புளிக்கவைக்கப்பட்டு திரவ உரமாகவும் உயிர் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. எரு முக்கியமாக வேகமாக வளரும் காய்கறிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் கலப்பு உரம்  குறிப்பாக நடுகையின் போது ஆண்டுத்தாவரங்களிற்கும் தேயிலைக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் பயன்படுத்தப்படுகிறது. அறுவடைக்கு ஏழு நாட்களுக்கு முன் தேயிலைக்கு திரவ உரம் இடப்படுகிறது.

இந்த தொகுப்புக்கு கால்நடை கொட்டகை, கலப்பு உரம் மற்றும் திரவ உரங்களை தயாரிப்பதற்கு மறுசுழற்சி அமைப்பு போன்றவற்றிற்கான போதுமான நிலம் தேவைப்படுகிறது. மேலும், முழு செயல்முறைக்கும் போதுமான தொழிலாளர் இருக்க வேண்டும். முக்கிய உள்ளீடுகளில் கொட்டகைக்கான பொருட்கள், தொடர்புடைய உள்கட்டமைப்பு மற்றும் திரவ உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு தெளிப்பான் ஆகியவை அடங்கும்.
பயிர் மற்றும் விலங்கு உற்பத்தி முறைகளுக்கு இடையில் ஊட்டச்சத்துக்களின் சுழற்சியை உறுதிப்படுத்துவதுடன் பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்க கழிவுகளை மீள்சுழற்சி செய்வதே இதன் முக்கிய நன்மையாகின்றது: இதனால் "உயிர் பொருளாதாரம்" ஆதரிக்கப்படுகிறது. மண் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விவரிக்கப்பட்ட ஊட்டச்சத்து ஆதாரங்கள் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கு மண் வளத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தியுள்ளன.

பால் கறவை  இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, தேயிலை அறுவடை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. காய்கறி சாகுபடியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

(1) தொழில்நுட்பம் எங்கே பயன்படுத்தப்படுகிறது?
செங்குத்தான நிலப்பரப்பில்: தேயிலை கீழே பயிரிடப்படுகிறது மற்றும் பள்ளத்தாக்கில் நீர்த்தேக்கங்கள் உள்ளன.
(2) நோக்கங்கள் / செயல்பாடுகள் என்ன?
• உணவு பாதுகாப்பு வழங்க வேண்டும்
• கால்நடை உற்பத்தி திறன் அதிகரித்தல்
• ஒட்டுமொத்த ஊட்டச்சத்து சுழற்சியை ஊக்குவித்தல்
• பகுதியளவு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை கரிம உரத்துடன் மாற்றல்
• மண் வளத்தை மேம்படுத்த உயர்தர கரிம உரம் மற்றும் உரம் தயாரித்தல்
• நதி நீர் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தல்
(3) தொழில்நுட்பத்தின் நன்மைகள்/தாக்கங்கள் என்ன?
• பூச்சிகள்/நோய்களுக்கு பயிர்களின் பாதிப்பு குறைதல்
• உணவு மற்றும் தண்ணீரின் தரத்தை மேம்படுத்துதல்
• நில அமைப்பழிவடைதலை குறைத்தல் மற்றும் மண் வளத்தை மீட்டெடுத்தல்
• குறைக்கப்பட்ட அபாயங்கள்

  • பொருளாதார ரீதியாக சாத்தியமான மற்றும் விரைவான தாக்கம்
    (4) நில பயனர்கள் எதை விரும்புகிறார்கள்
    • குறைக்கப்பட்ட அபாயங்கள்
    • வருமான அதிகரிப்பு
    • உற்பத்தி செலவு குறைப்பு
    (5) …வெறுக்கிறார்கள்
    • வன விலங்குகளால் பயிர்கள் சேதம்.
    • பால் பண்ணைக்கு அதிக செலவு (தீவனம்)

தொகுப்பாளர்: தலைவர், மண் விஞ்ஞானத் துறை, விவசாயப் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்

இணைத் தொகுப்பாளர்கள்: பேராசிரியர் சண்டி ராஜபக்ஷ, நிலாந்திகா பெத்தேகம (மண் விஞ்ஞானத் துறை, விவசாய பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்)

முக்கிய வளவாளர்கள்: நிமல் குணசேன (ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு)

நிலப் பயனாளர்: கல்லோர சாந்த (குருகலே, நில்லம்ப, கம்பளை)

மேலும் தகவலுக்கு:https://qcat.wocat.net/en/wocat/technologies/view/technologies_6236/