விண்ணப்பம் கோரல்

மத்திய மலைநாட்டின் கண்டி, பதுளை, நுவரெலியா பகுதிகளில் வளம் குறைந்த விவசாய நிலங்களை புனர் நிர்மானம் செய்யும் திட்டம் (RDALP) என்பது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO), சுகாதார அமைச்சு மற்றும் விவசாய திணைக்களத்தின் இயற்கை வளங்கள் முகாமைத்துவ மையத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் ஒரு செயற்பாடாக, நிலையான நில முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பிலான அறிவு மற்றும் அனுபவ பகிர்வினை ஊக்குவிப்பதனூடாக இலங்கையில் நிலையான விவசாயத்தை கடடியெழுப்பும் நோக்கில் இத்தேசிய முயற்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நிலையான நில முகாமைத்துவ நடைமுறைகள் (10 தொழில்நுட்பங்கள் மற்றும் 05 அணுகுமுறைகள்) சுயாதீன நிபுணர் குழு ஒன்றினால் தெரிவு செய்யப்படும். தேர்வுகளின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் கருத்திற் கொள்ளப்படும்.


• புதுக் கண்டுபிடிப்பு: புதிய நடைமுறைகளளின் அறிமுகம்இ கண்டுபிடிப்பு மற்றும் செயற்படுத்துகை
• செயல் திறன்: குறித்த பலனை அடையும் திறன்
• உகந்த பயன்பாடு: வளங்களின் உகந்த பயன்பாடு மற்றும் குறைந்த செலவில் பலனை அடையும் திறன்
• தொடர்பு: நில சீரழிவு தொடர்பிலான பிரச்சினைகளுக்கான தீர்வு தரக்க்கூடியதாக இருத்தல்
• நிலைத்தன்மை: உகந்த வளப் பயன்பாட்டுடன்கூடிய நிலைத்திருக்கும் தன்மை
• பங்கேற்பு: நடைமுறை அபிவிருத்தி மற்றும் செயற்படுத்தலின் போது பலதரப்பட்ட பங்குதாரர்களின் பங்களிப்பு


இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்கள் உள்ளடங்கிய கருத்துக்குறிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தினை கீழுள்ள இணைப்பின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்

இணைப்பு

கருத்து குறிப்பில் தரப்பட்டிருக்கும் படிவத்திற்கு அமைய தங்களால் நடைமுறைப்படுத்தப்படும் நிலையான நில முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பிலான தகவல்களை 31.03.2021 திகதிக்கு முன்பு கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


முகாமையாளர்
RDALP திட்டம் ,
கFAO அலுவலகம்
இயற்க்கை வள முகாமைத்துவ மையம்
இல : 52 சரசவி வீதி, பேராதனை

தொ.இ : 0812 085120/ 074 1747392
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.